தேசிய செய்திகள்

மராட்டியம்: பெண் காவலர்களின் பணி நேரம் குறைப்பு + "||" + Maharashtra: The new shorter 8-hour working day for women police personnel will be implemented on an experimental basis.

மராட்டியம்: பெண் காவலர்களின் பணி நேரம் குறைப்பு

மராட்டியம்: பெண் காவலர்களின் பணி நேரம் குறைப்பு
மராட்டிய மாநிலத்தில் பெண்களுக்கான பணி நேரம் சோதனை அடிப்படையில் 12 மணி நேரத்திலிடுந்து 8 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
மும்பை,

மராட்டிய மாநிலம் முழுவதும் பெண் காவலர்கள் 12 மணி நேரத்துக்குப் பதிலாக 8 மணி நேரம் மட்டுமே பணியில் இருக்க வேண்டும் என்று அம்மாநில காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) சஞ்சய் பாண்டே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தற்போது ஆண் மற்றும் பெண் காவலர்களின்  பணி நேரம் 12 மணி நேரமாக இருக்கும் நிலையில், தற்போது பெண் காவலர்களுக்கு சிறந்த  வேலை மற்றும் வாழ்க்கை வழங்கும் நோக்குடன் பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

உத்தரவின்படி, சோதனை அடிப்படையில் முதற்கட்டமாக நாக்பூர், அமராவதி நகரங்கள் மற்றும் புனே கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படுகிறது. அவசர காலத்திலும் பண்டிகைக் காலத்திலும் அவர்களுக்கான பணி நேரத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் அல்லது துணை காவல் ஆணையர்களின் அனுமதியுடன் அதிகரிக்கலாம் எனவும் இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பெண்கள் மீது தாக்குதல் நடத்த கை ஓங்கும் ஆணின் கைகள் உடைக்கப்படும் - பெண் எம்.பி. அதிரடி பேச்சு
பெண்கள் மீது தாக்குதல் நடத்த கை ஓங்கும் ஆணின் கைகள் உடைக்கப்படும் என்று பெண் எம்.பி. தெரிவித்துள்ளார்.
2. மராட்டியம்: பயங்கர ஆயுதங்களுடன் மக்களை அச்சுறுத்திய 5 பேர் கைது
மராட்டியத்தில் பயங்கர ஆயுதங்களுடன் மக்களை மிரட்டி வந்த ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டனர்.
3. மராட்டியம்: ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு - 6 பேர் படுகாயம்
மராட்டியத்தில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்ததுடன், 6 பேர் படுகாயமடைந்தனர்.
4. மண்டபத்திற்கு 5 மணி நேரம் தாமதம்: மணமகனின் நடன மோகத்தால் நின்ற திருமணம்..!!
மணமகன் தாமதமாக வந்ததால், ஆத்திரமடைந்த மணப்பெண்ணின் தந்தை திருமணத்தை நிறுத்திய சம்பவம் மராட்டியத்தில் நடந்து உள்ளது.
5. தொற்று அதிகரித்தால், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும்: மராட்டிய சுகாதார மந்திரி
தொற்று அதிகரித்தால், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என்று மராட்டிய சுகாதார மந்திரி கூறியுள்ளார்.