இந்தியாவில் 2- வது நாளாக கொரோனா பாதிப்பு குறைவு


இந்தியாவில் 2- வது நாளாக கொரோனா பாதிப்பு குறைவு
x
தினத்தந்தி 29 Jan 2022 3:58 AM GMT (Updated: 29 Jan 2022 3:58 AM GMT)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 532- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசின் 3-வது அலை பாதிப்பு சற்று தணியத்தொடங்கியுள்ளது. கடந்த வாரங்களில் கிடு கிடுவென உயர்ந்த தினசரி பாதிப்பு கடந்த சில தினங்களாக  இறங்கு முகம் கண்டுள்ளது. 

நேற்று முன்தினம் 2 லட்சத்து 86 ஆயிரத்து 384 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கையில் ஏறத்தாழ 35 ஆயிரம் குறைந்து 2 லட்சத்து 51 ஆயிரத்து 209 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. 

இந்த நிலையில், 2-வது நாளாக கொரோனா பாதிப்பு இன்றும் சற்று குறைந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 532- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 871- பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து நேற்று மட்டும் 3 லட்சத்து 35 ஆயிரத்து 939- பேர் குணம் அடைந்துள்ளனர்.  கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்து 04 ஆயிரத்து 333- ஆக உள்ளது. 

 கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 13.39-சதவிகிதமாக உள்ளது. இந்தியாவில் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 164.04 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 95 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும் 74 சதவீதம் பேர் இரு தவணை தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளனர். 

Next Story