ஜம்மு-காஷ்மீர்: சீன துப்பாக்கிகளுடன் 3 பேரை கைது செய்த இந்திய ராணுவம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 29 Jan 2022 6:07 AM GMT (Updated: 2022-01-29T12:10:12+05:30)

இரண்டு சீன துப்பாக்கிகளுடன் 3 பேரை இந்திய ராணுவம் கைது செய்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர்,

ஜம்மு-காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள ஹதுராவில் இந்திய ராணுவத்தினர் வாகனசோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது, மூன்றுபேர் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்த ராணுவத்தினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் லஷ்கர்-இ-தொய்யா அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை கைது செய்த ராணுவத்தினர், அவர்களிடம் இருந்து 2 சீன துப்பாக்கிகள், தோட்டாக்கள், கையறி குண்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் ராணுவத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story