கர்நாடகத்தில் பள்ளி மாணவர்கள் 37 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் பள்ளி மாணவர்கள் 37 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 30 Jan 2022 10:00 PM GMT (Updated: 2022-01-31T03:30:21+05:30)

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கொரோனா தொற்று அதிகரித்து வந்ததால், கர்நாடக மாநிலத்தில் பள்ளிகளை திறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கு தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் இன்று(திங்கட்கிழமை) முதல் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்த நிலையில் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகூர் தாலுகா ஹட்டி பட்டணத்தில் உள்ள 2 தனியார் பள்ளிகளில் படித்து வரும் 10-ம் வகுப்பு மாணவர்கள் 37 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த 2 பள்ளிகளுக்கும் சீல் வைக்கப்பட்டு தலா 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளன.

Next Story