ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் கோடி
ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
புதுடெல்லி,
கடந்த ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 394 கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. இதன்மூலம் தொடர்ந்து 4-வது மாதமாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி. வருவாய் கிடைத்துள்ளது.
இந்த ஜனவரி மாத ஜி.எஸ்.டி. வசூல், கடந்த ஆண்டு இதே ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 15 சதவீதம் அதிகம். 2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 25 சதவீதம் அதிகம் ஆகும்.கடந்த 30-ந் தேதி வரை மொத்தம் 1 கோடியே 5 லட்சம் ஜி.எஸ்.டி. கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பொருளாதாரம் மீண்டு வருதல், வரி ஏய்ப்பு தடுப்பு நடவடிக்கைகள், போலி ரசீதுக்கு எதிரான நடவடிக்கைகள், வரிவிகிதத்தை ஒழுங்குபடுத்துதல் ஆகியவைதான் ஜி.எஸ்.டி. வசூல் அதிகரித்ததற்கு காரணங்கள் என்று மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. வரும் மாதங்களிலும் இதே போக்கு தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story