5 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரபிரதேசத்தில் குண்டர்கள் ராஜ்ஜியம் நடந்தது - மோடி குற்றச்சாட்டு
உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் இம்மாதம் 10-ந்தேதி தொடங்கி, 7 கட்டங்களாக நடக்கிறது.
லக்னோ,
உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் இம்மாதம் 10-ந்தேதி தொடங்கி, 7 கட்டங்களாக நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக நேற்று பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பொதுக்கூட்டங்களுக்கு தடை இருப்பதால், காணொலி காட்சி மூலம் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். முந்தைய சமாஜ்வாடி கட்சி ஆட்சியை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்தார். அவர் பேசியதாவது:-
உத்தரபிரதேசத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு குண்டர்களும், கலவரக்காரர்களும் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு செயல்பட்டனர். அவர்களின் ராஜ்ஜியம்தான் நடந்தது. அரசாங்க உத்தரவு என்று அதற்கு காரணமும் தெரிவித்தனர். அப்போது, வியாபாரிகளிடம் கொள்ளையடித்தனர். இளம்பெண்கள், தங்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாதநிலை இருந்தது. மேற்கு உத்தரபிரதேசம், கலவரத்தால் எரிந்து கொண்டிருந்தது. ஆனால் அப்போதைய ஆட்சியாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
இந்தியா தயாரித்த தடுப்பூசிகள் மீது நம்பிக்கை இல்லாமல் சில கட்சிகள் வதந்தி பரப்புகின்றன. அத்தகைய கட்சிகள், உத்தரபிரதேச இளைஞர்களின் திறமையை எப்படி மதிக்கும்?
இவ்வாறு மோடி பேசினார்.
Related Tags :
Next Story