கேரளாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை முதல்-மந்திரி பினராயி விஜயன் எச்சரிக்கை
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டால் அந்த மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவனந்தபுரம்,
கொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துபாயில் உள்ள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆன்லைன் மூலமாக கலந்து கொண்டார். இந்த கூட்டத்திற்கு பின் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேரளாவில் வருகிற 6-ந்தேதி ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். கடந்த ஞாயிற்றுக்கிழமையை போல், அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தீவிரமாக பாதிக்கப்பட்ட
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டால் அந்த மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தனியார் மருத்துவமனைகளுக்கும் பொருந்தும்.
மாநிலத்தில் நேற்று 42 ஆயிரத்து 152 பேருக்கு கொரோனா. தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 81 கொரோனா
நோயாளிகள் மரணம் அடைந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 54 ஆயிரத்து 395 ஆக உயர்ந்து உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story