அமலாக்கத்துறை முன்னாள் இணை இயக்குனர் பாஜக சார்பில் போட்டி?
அமலாக்கத்துறை இணை இயக்குனர் தனது பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
லக்னோ,
அமலாக்கத்துறையின் இணை இயக்குனராக பணியாற்றியவர் ராஜேஷ்வர் சிங். ஐபிஎஸ் அதிகாரியான இவர் 10 ஆண்டுகள் உத்தரபிரதேச காவல்துறையிலும், 14 ஆண்டுகள் அமலாக்கத்துறையிலும் பணியாற்றியுள்ளார்.
இதனிடையே, அமலாக்கத்துறை இணை இயக்குனர் பதவியில் இருந்து ராஜேஷ்வர் சிங் சமீபத்தில் விலகினார். மேலும், தனக்கு விருப்ப ஓய்வு வழங்கும்படி மத்திய அரசுக்கு அவர் கடிதம் எழுதினார். இதனை தொடர்ந்து ராஜேஷ்வர் சிங்கிற்கு விருப்ப ஓய்வு அளித்து பணியில் இருந்து அவரை விடுவித்தது.
இந்நிலையில், ராஜேஷ்வர் சிங் உத்தரபிரதேச தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, அவர் பாஜக கட்சியில் விரைவில் இணைய உள்ளார்.
பாஜகவில் இணைய உள்ள ராஜேஷ்வர் சிங் உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமலாக்கத்துறையில் பணியாற்றியபோது ராஜேஷ்வர் சிங், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கு, அகஸ்டாவெஸ்ட்லென்ட் ஹெலிகாப்டர் கொள்முதல் விவகாரம் உள்பட பல்வேறு முக்கிய வழக்குகளில் இவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story