கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் மும்பையில் இரவுநேர ஊரடங்கு ரத்து!
ஓட்டல்களில் 50% வாடிக்கையாளார்கள் அமர்ந்து உணவு உண்ண அனுமதி உள்ளிட்ட தளர்வுகள் வெளியாகி உள்ளன.
மும்பை,
மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு மெல்ல குறைந்து வருகிறது. இப்போதைய சூழலில் நாள் ஒன்றுக்கு 1000க்கும் கீழ் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு அம்மாநில அரசு கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது.
அதன்படி, ஓட்டல்களில் 50% வாடிக்கையாளார்கள் அமர்ந்து உணவு உண்ண அனுமதி மற்றும் தியேட்டர்களில் 50% பார்வையாளர்கள் அனுமதி உள்ளிட்ட தளர்வுகள் வெளியாகி உள்ளன.
கடற்கரை, பூங்காக்கள் போன்ற இடங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கேளிக்கை பூங்காக்கள் மற்றும் நீர் விளையாட்டு பூங்காக்களில் 50% பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது..
கலாச்சார நிகழ்வுகள், ஆன்மீக கூட்டங்களில் 50% பேர் கலந்து கொள்ளலாம். திருமண நிகழ்ச்சிகளில் 25% பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு நிகழ்ச்சிகளில் 25% பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வாரச்சந்தைகள் வழக்கம் போல செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இரவுநேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story