நீதிபதிக்கு கொரோனா: ஆமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கு தீர்ப்பு தள்ளிவைப்பு
நீதிபதிக்கு கொரோனா பாதிப்பு காரணமாக ஆமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கு தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஆமதாபாத்,
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 56 பேர் இறந்தனர், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 2002-ம் ஆண்டு கோத்ரா கலவரத்துக்கு பழிவாங்கும் விதமாக இந்த பயங்கர சம்பவம் நடத்தப்பட்டதாகவும், இதன் பின்னணியில், தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் (சிமி) ஒரு பிரிவான இந்தியன் முஜாகிதீன் இருப்பதாகவும் போலீஸ் தெரிவித்தது.
அது தொடர்பாக 78 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவர்களில் ஒருவர் பின்னர் ‘அப்ரூவர்’ ஆனார். இந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கை ஒரு சிறப்பு கோர்ட்டு விசாரித்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால் சிறப்பு கோர்ட்டு நீதிபதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால், தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. அனேகமாக வருகிற 8-ந் தேதி தீர்ப்பு அளிக்கப்படலாம். அது குறித்து சில நாட்களுக்கு முன்பு நீதிபதி உறுதிப்படுத்துவார் என அரசு மூத்த வக்கீல் சுதிர் பிராம்பட் தெரிவித்தார்.
Related Tags :
Next Story