காரின் ஹெட்லைட் வெளிச்சத்தில் தேர்வு எழுதிய 12-ம் வகுப்பு மாணவர்கள்..!


காரின் ஹெட்லைட் வெளிச்சத்தில் தேர்வு எழுதிய 12-ம் வகுப்பு மாணவர்கள்..!
x
தினத்தந்தி 2 Feb 2022 5:56 PM IST (Updated: 2 Feb 2022 5:56 PM IST)
t-max-icont-min-icon

பீகாரில் காரின் ஹெட்லைட் வெளிச்சத்தில் 12-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாட்னா,

பீகாரில் தேர்வு கூடத்தில் மின்சாரம் இல்லாததால் காரின் ஹெட்லைட் வெளிச்சத்தில் 12-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) பீகார் மாநிலத்தில் உள்ள மகாராஜா ஹரேந்திர கிஷோர் கல்லூரியில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான இடைத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் ஏறக்குறைய 400 மாணவர்கள் தேர்வு எழுத வந்தனர்.

திங்கள்கிழமை இரண்டாம் பகுதி தேர்வு மதியம் 1.45 மணி முதல் 5 மணி வரை நடைபெற இருந்தது. கடைசி நேரத்தில் இருக்கைகள் ஒழுங்கு செய்வதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக மாலை 4.30 மணி வரை மாணவர்களுக்கு விடைத்தாள்கள் கொடுக்கப்படவில்லை.

இதையடுத்து தேர்வு மையத்தில் குழப்பம் மற்றும் போராட்டம் ஏற்பட்டது. போராட்டத்தை சமாளிக்க போலீசார் வரவழைக்கப்பட்டனர். நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பிறகு தேர்வு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெற்றது. 

மாணவர்கள் தேர்வு எழுதும் நேரத்தில் இருட்டாகிவிட்டது. மேலும் தேர்வு மையத்தில் மின்சாரம் இல்லாததால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியாக ஜெனரேட்டர்கள் கொண்டு சில வகுப்பறைகளுக்கு வெளிச்சத்தை ஏற்படுத்தினர். மேலும் கார்கள் வைத்திருந்த பெற்றோர்கள் தங்கள் கார்களின் ஹெட்லைட்கள் மூலம் வெளிச்சம் ஏற்படுத்தி மாணவர்களை வறண்டாவில் அமர்ந்து தேர்வு எழுத வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட உயர் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

Next Story