“குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் குறித்து அதிக கவனம் கொண்டுள்ளோம்” - பியூஷ் கோயல்
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் குறித்து அரசு அதிக கவனம் கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் இன்று கேள்வி நேரத்தில் திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி பேசிய போது, இரும்பு, செம்பு உள்ளிட்ட மூலப்பொருட்களின் அடக்க விலையை சீராக வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், கொரோனா பெருந்தொற்று காலத்திலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் குறித்து அரசு அதிக கவனம் கொண்டுள்ளதாக கூறினார். மேலும் இந்த நிறுவனங்களுக்கு நாடு முழுவதும் நான்கரை லட்சம் கோடிக்கும் அதிகமான கடன் உத்தரவாத நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதாக அவர குறிப்பிட்டார். இதன் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதி வீழ்ச்சியை சந்திக்கவில்லை எனவும், கடந்த ஏப்ரல் முதல் தற்போது வரை 30 பில்லியன் டாலர் அளவிலான ஏற்றுமதி நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்த அவர், இது இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய உச்சம் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story