தமிழகத்தில் நீட் தேர்வால் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: மக்களவையில் டி.ஆர்.பாலு பேச்சு
தமிழகத்தில் நீட் தேர்வால் 30க்கும் மேற்பட்டோர் இதுவரை தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மக்களவையில் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
புதுடெல்லி,
தமிழகத்தில் நீட் தேர்வால் 30க்கும் மேற்பட்டோர் இதுவரை தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மக்களவையில் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
இதுதொடர்பாக மக்களவையில் பேசிய அவர், “நீட் பாடத்திட்டத்தில் உள்ள பெரும்பாலான கேள்விகள் அனைத்தும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா ஏற்றப்பட்டு 5 மாதங்களாகிறது. கடந்த 5 மாதமாக கவர்னர் புதிய மசோதா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலனை பாதுகாக்க வேண்டும். பிரதமர் மோடி அனைத்து மாநிலங்களையும் ஒரே மாதிரியாக பார்க்க வேண்டும்” என்று டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
Related Tags :
Next Story