கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் பணி: இதுவரை 321 பேர் உயிரிழப்பு - ராம்தாஸ் அத்வாலே


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 2 Feb 2022 9:37 PM IST (Updated: 2 Feb 2022 9:37 PM IST)
t-max-icont-min-icon

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இதுவரை 321 பேர் உயிரிழந்ததாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இதுவரை 321 பேர் உயிரிழந்ததாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் உறுப்பினர் எழுப்பியிருந்த எழுத்துப்பூர்வ கேள்விக்கு, பதில் அளித்த மத்திய இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே, இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் கடந்த 5 ஆண்டுகளில் 321 பேர் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது உயிரிழந்துள்ளனர் என்று அவர் கூறினார். 

மேலும் அதில் 259 பேருக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தை பொறுத்தவரை இதே 5 ஆண்டுகளில் 43 பேர் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் உயிரிழந்து உள்ளதாகவும், அதில் 42 பேருக்கான இழப்பீடு வழங்கப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

Next Story