டெல்லியில் இன்று 3,028 பேருக்கு கொரோனா


டெல்லியில் இன்று 3,028 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 2 Feb 2022 9:46 PM IST (Updated: 2 Feb 2022 9:46 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் தற்போது 14,870 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுடெல்லி,

டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று 3,028 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 18,35,979 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,892 ஆக உள்ளது. அதே சமயம் டெல்லியில் இன்று 4,679 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் டெல்லியில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17,95,190 லட்சமாக உயர்ந்துள்ளது. டெல்லியில் தற்போது 14,870 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story