டிஜிட்டல் பணத்தை ரூபாய் நோட்டுகளாக மாற்றலாம் - பிரதமர் மோடி அறிவிப்பு


டிஜிட்டல் பணத்தை ரூபாய் நோட்டுகளாக மாற்றலாம் - பிரதமர் மோடி அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Feb 2022 10:38 PM GMT (Updated: 2 Feb 2022 10:38 PM GMT)

டிஜிட்டல் பணத்தை ரூபாய் நோட்டுகளாக மாற்றலாம் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசும்போது, பாரத ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கரன்சியை வெளியிடும் என கூறினார்.

இந்த டிஜிட்டல் கரன்சி, கிரிப்டோகரன்சிக்கு போட்டியாக வருவதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் டெல்லியில் நேற்று நடந்த பா.ஜ.க. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் இதுபற்றி குறிப்பிட்டார்.

அப்போது அவர், “நமது ரூபாயின் டிஜிட்டல் வடிவமாகத்தான் டிஜிட்டல் பணம் வருகிறது. இது ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படும். இது, டிஜிட்டல் கரன்சியுடன் ரொக்க பணத்தை பரிமாற்றம் செய்யும் ஒரு அமைப்பாக இருக்கும்” என குறிப்பிட்டார்.

மேலும், “இந்த டிஜிட்டல் பணம், டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும். டிஜிட்டல் பணமாக செய்கிற பரிமாற்றத்தை, ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம். டிஜிட்டல் பணம், டிஜிட்டல் பண பட்டுவாடாவை, ஆன்லைன் பரிமாற்றங்களை மேலும் பாதுகாப்பாகவும், இடரின்றி செய்யவும் வழிவகுக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே டிஜிட்டல் பணத்தை வங்கியில் கொடுத்து ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ள முடியும் என்று இப்போது தெரிய வந்துள்ளது.

Next Story