30 ரவுடிகளை ஏவி மதுபான பாரை சூறையாடிய போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் கைது


30 ரவுடிகளை ஏவி மதுபான பாரை சூறையாடிய  போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் கைது
x
தினத்தந்தி 3 Feb 2022 11:58 AM IST (Updated: 3 Feb 2022 11:58 AM IST)
t-max-icont-min-icon

மதனப்பள்ளி அருகே 30 ரவுடிகளை ஏவி மதுபானப் பாரை சூறையாடிய கலால் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்தனர்

ஸ்ரீகாளஹஸ்தி

ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி-புங்கனூர் சாலையில் கிருஷ்ணாபுரம் அருேக கலால் துறைக்குச் சொந்தமான மதுபானக் குடோன் உள்ளது. அதன் கண்காணிப்பாளராக மதனப்பள்ளியை அடுத்த ராஜீவ்நகரில் வசித்து வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜவஹர்பாபு பணியாற்றி வந்தார். அவருடன் அதே குடோனில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் என்பவரும் பணியாற்றி வந்தார்.

மதனப்பள்ளி அவென்யூ சாலையில் மதுபானப் பாருடன் கூடிய ஒரு ஓட்டல் உள்ளது. அதன் உரிமையாளர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடு சென்றதால், அந்தப் பாரை அப்பகுதியைச் சேர்ந்த சோமு என்பவர் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், எஸ்.பி.ஐ. காலனியைச் சேர்ந்த வெங்கடசிவபிரசாத் ஆகியோருடன் சேர்ந்து நடத்தி வந்தார்.

மதுபானப் பாருக்கு தேவையானப் பொருட்களை கொண்டு வருவதில் வெங்கடசிவபிரசாத், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து வெங்கடசிவபிரசாத் பார் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் பார் உரிமையாளர் கலால் துறை ஆணையாளரிடம் புகார் செய்தார். எனினும், பொருட்களை கொண்டு வராமல் இருந்ததால் மதுபானப் பாரை மூட வேண்டிய நிலை வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியார் சேர்ந்து கடந்த ஜனவரி மாதம் 30-ந்தேதி தனக்கு தெரிந்த 30 ரவுடிகளுடன் வந்து வெங்கடசிவபிரசாத்தை தாக்கினார். மதுபானப் பாரை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

இதுகுறித்து வெங்கடசிவபிரசாத் கொடுத்த புகாரின் பேரில் மதனப்பள்ளி 2-டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்த சித்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மதனப்பள்ளி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டரும் சேர்ந்து ரவுடிகளை ஏவி வெங்கடசிவபிரசாத்தை தாக்கியது தெரிய வந்தது.

இதைடுத்து இன்ஸ்பெக்டர் ஜவஹர்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களை மதனப்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 30 ரவுடிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள், எனப் போலீசார் கூறினர்.


Next Story