கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள்...! இன்று மாலை பேசுகிறேன்; பா.ஜ.கவுக்கு பெண் எம்.பி சவால்


கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள்...! இன்று மாலை பேசுகிறேன்; பா.ஜ.கவுக்கு பெண் எம்.பி சவால்
x
தினத்தந்தி 3 Feb 2022 1:31 PM IST (Updated: 3 Feb 2022 1:31 PM IST)
t-max-icont-min-icon

கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள். நான் இன்று மாலை அவையில் பேசுகிறேன் என்று பாஜகவினருக்கு டுவிட்டர் வாயிலாக சவால் விடுத்துள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா.

கொல்கத்தா: 

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி  உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பேச்சு அதிர்வலையை ஏற்படுத்தியது. அது இன்னும் அடங்காத நிலையில் பா.ஜ.க.வினருக்கு சவால் விடுத்திருக்கிறார் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா.

இவர் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போதே தனது அனல் பறக்கும் பேச்சால் அவையை அதிர வைத்தவர். "அதிகார மமதை, வெறுப்பு, மதவெறி, பொய் ஆகியவற்றால் மறைந்திருக்கும் கோழைகள், இந்த விஷயங்களை வீரம் என்று கருதுகிறார்கள். இந்த அரசும், தனது பிரசாரத்தில் பொய்களை பரப்புவதன் மூலம் கோழைத்தனத்தை வீரம் என்று காட்டுவதை தங்களது மிகப்பெரிய வெற்றியாக கருதி வருகிறது" என்று பேசி பரபரப்பைக் ஏற்படுத்தினார்.

இந்நிலையில் இந்த முறையும் தனது பேச்சு குறித்த முன்னோட்டத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

இன்று மாலை நான் மக்களவையில் ஜனாதிபதி உரை மீதான தீர்மானத்தின் போது பேசுகிறேன். பா.ஜ.க.வினரே, கற்பனைக் கதைகளைக் கட்டவிழ்க்கும் உங்களுடைய தாக்குதல் படையைத் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். வேண்டுமென்றால் கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story