கோவாவில் இலவச மின்சாரம், சுகாதார வசதி: கெஜ்ரிவாலின் தேர்தல் வாக்குறுதி..!
ஆம் ஆத்மி கட்சியில் சேர வேண்டாம் என்றும் உங்கள் கட்சியை புறக்கணியுங்கள் என்றும் காங்கிரஸ், பாஜக.வினருக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பனாஜி,
ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலில் கோவா மாநிலத்திற்கு வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கட்சித் தலைவர்கள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்
கோவா பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.
இந்நிலையில் கோவாவில் மக்களுக்கு சுகாதாரம் மற்றும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நிருபர்கள் சந்திப்பில் பேசிய அவர், “வரும் தேர்தலில் கோவா மக்கள், எங்கள் கட்சிக்கு வாக்களித்தால் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் பெற முடியும். மேலும், இலவச மின்சாரம் மற்றும் இலவச சுகாதாரம் கிடைக்க உறுதியளிக்கிறேன். தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக, முன்னதாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்குமே கோவா மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. கோவா வளர்ச்சிக்காக அவர்களிடத்தில் எந்த திட்டங்களும் இல்லை.
பாஜக, காங்கிரஸ் மற்றும் பிற கட்சியைச் சேர்ந்தவர்கள் உங்கள் கட்சியிலிருந்து விலகி ஆம் ஆத்மியில் இணையத் தேவையில்லை. ஆனால், ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள். ஏனெனில், கோவாவில் காங்கிரஸ் தலைவர்களின் மோசடிகளை மறைப்பதே பாஜகவின் வேலையாக இருக்கிறது. பாஜக 15 ஆண்டுகளும், காங்கிரஸ் 25 ஆண்டுகளும் ஆட்சி செய்துள்ளது. எனினும் கோவாவில் பல மோசடிகள் மட்டுமே நடந்துள்ளன.
இந்த கோவா தேர்தலில், கட்சி விசுவாசத்தை தாண்டி, நேர்மையான அரசியலுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள், உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக. இலவச மின்சாரம், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற எங்கள் பணிகள் உங்கள் அனைவருக்கும் பயனளிக்கும்” என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்
Related Tags :
Next Story