31 தனிநபர்கள் பயங்கரவாவாதிகளாக அறிவிப்பு - மத்திய அரசு தகவல்


31 தனிநபர்கள் பயங்கரவாவாதிகளாக அறிவிப்பு - மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 3 Feb 2022 6:41 PM IST (Updated: 3 Feb 2022 6:41 PM IST)
t-max-icont-min-icon

31 தனிநபர்கள்பயங்கரவாவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி

நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் குறித்து மத்திய உள்துறை இணைமந்திரி நித்யானந்த் ராய் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளதாவது:-

சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு)ச் சட்டம், 1967, முதல் அட்டவணையில், நாட்டில் உள்ள 42 பயங்கரவாத அமைப்புகள் சேர்க்கப்பட்டிருப்பதுடன், இவற்றில் 13 அமைப்புகள் சட்டவிரோத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டத்தின் நான்காவது அட்டவணையின்படி, இதுவரை, 31 தனிநபர்கள், பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய- மாநில அரசுகளின் சட்ட அமலாக்க அமைப்புகள், இதுபோன்ற அமைப்புகள் / தனிநபர்களின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்து, சட்டத்தின்படி அவற்றின்மீது உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றன.

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் தலைவர்கள்/உறுப்பினர்கள் பயங்கரவாதிகளாக அறிவிப்பதற்கான சட்டப்பிரிவு, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு)ச் சட்டம், 2019-ல் சேர்க்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய உள்துறை  இணை மந்திரி நித்யானந்த் ராய் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

Next Story