நீட் விலக்கு மசோதாவை திரும்ப அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு
நீட் விலக்கு மசோதாவை திரும்ப அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூ. உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
புதுடெல்லி,
தமிழகத்தில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க வேண்டும் என பல்வேறு கட்சித் தலைவர்களும் வலியிறுத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது.
பின் அந்த மசோதா ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தற்போது கவர்னர் ஆர்.என் ரவி நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசிற்கே திருப்பி அனுப்பினார். அதற்கான காரணங்களை கடந்த பிப்.1 ஆம் தேதி தமிழக அரசிற்கு விளக்கியுள்ளதாக கவர்னர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. நீட் தேர்வு அவசியம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதையும் கவர்னர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார். மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு சபாநாயகருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அறிவுறுத்தி உள்ளார்.
இந்தநிலையில், நீட் விலக்கு மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியதற்கு மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறுமாறு மக்களவையில் தமிழக எம்.பிக்கள் முழுக்கமிட்டு வருகின்றனர்.
தமிழக கவர்னரை திரும்பப்பெறக்கோரி மக்களவையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீட் விலக்கு மசோதாவை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியதற்கு கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என தமிழ்நாடு எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.
தொடர்ந்து 5 மாதங்கள் காலதாமதம் செய்து, நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார் எனவும் நீட் விலக்கு மசோதாவை அனுப்பும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை என மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கூறினார்.
ஒரு மசோதாவை திரும்பி அனுப்பும் அதிகாரம் கவர்னருக்கு உள்ளது என மக்களவையில் மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் பதில் அளித்துள்ளார்.
இதனையடுத்து தமிழக கவர்னரை திரும்பப்பெறக்கோரி மக்களவையில் இருந்து திமுக எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர். திமுகவை தொடர்ந்து காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்.கட்சி உறுப்பினர்களும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
Related Tags :
Next Story