மராட்டியத்தில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 15,252 பேருக்கு தொற்று


மராட்டியத்தில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 15,252 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 3 Feb 2022 10:21 PM IST (Updated: 3 Feb 2022 10:21 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,252 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் ஆயிரத்திற்கும் கீழ் இருந்த தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தநிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கி உள்ளது. 

அதன்படி, மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 15,252 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 77,68,880 ஆக உயர்ந்துள்ளது

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 30 ஆயிரத்து 235 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 74 லட்சத்து 63 ஆயிரத்து 868 ஆக அதிகரித்துள்ளது. 

மாநிலம் முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 58 ஆயிரத்து 151 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று மேலும் 75 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்து 859 ஆக அதிகரித்துள்ளது.

Next Story