பெங்களூருவில் கடந்த ஆண்டு பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் ரூ.3¼ கோடி அபராதம் வசூல்


பெங்களூருவில் கடந்த ஆண்டு பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் ரூ.3¼ கோடி அபராதம் வசூல்
x
தினத்தந்தி 4 Feb 2022 6:43 AM IST (Updated: 4 Feb 2022 6:43 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், கடந்த 2021-ம் ஆண்டில் பொது இடங்களில் குப்பை கழிவுகளை கொட்டியவர்களிடம் இருந்து ரூ.3¼ கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு மாநகரில் குப்பை கழிவுகளை நிர்வகிக்கும் பிரச்சினை மாநகராட்சி நிர்வாகத்துக்கு பெரும் தலைவலியாக உள்ளது. மாநகராட்சியின் குப்பை வாகனம் மூலம் தினமும் வீடு, வீடாக சென்று குப்பை கழிவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் குப்பை பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

இந்த நிலையில் சாலைகள், நடைபாதைகள், குடியிருப்பு பகுதிகளில் குப்பை கொட்டுபவர்களை கண்டறிந்து அவர்களிடம் இருந்து மாநகராட்சி மார்ஷல்கள் அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டில் பெங்களூருவில் பொது இடங்களில் குப்பை கொட்டியவர்கள், குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்கியவர்களிடம் இருந்து ரூ.3.20 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. மேலும் திடக்கழிவு மேலாண்மை விதிகளை மீறியதாக ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 212 வழக்குகளும் பதிவாகி உள்ளது.

இதுதவிர பொது இடங்களில் பாலித்தீன் பைகளை வீசியதாக 627 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.2.60 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. பொது இடங்களில் எச்சில் துப்பியதாக 8 ஆயிரத்து 412 வழக்குகள் பதிவு செய்த மாநகராட்சி மார்ஷல்கள் ரூ.8½ லட்சத்தை அபராதமாக வசூலித்தனர். பொதுஇடத்தில் சிறுநீர் கழித்தவர்களிடம் இருந்து ரூ.2.90 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

Next Story