முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு


முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 4 Feb 2022 10:53 AM IST (Updated: 4 Feb 2022 10:58 AM IST)
t-max-icont-min-icon

மார்ச் 12ம் தேதி நடைபெறுவதாக இருந்த நீட் முதுநிலை தேர்வை 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

எம்.டி., எம்.எஸ்., உள்ளிட்ட முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான முதுகலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

முதுகலை மருத்துவ நீட் தேர்வு வருகிற மார்ச் 12ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில்  முதுகலை மருத்துவ நீட் தேர்வு 6 முதல் 8 வாரங்கள் வரையில் ஒத்திவைக்கப்படுவதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story