முதல்-மந்திரியை விமர்சித்து கருத்து பகிர்வு... தலைமைச் செயலக ஊழியர் பணியிடை நீக்கம்
கேரள முதல்-மந்திரியை விமர்சித்து கருத்து பதிவிட்ட தலைமைச் செயலக ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கடந்த 15 ஆம் தேதி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு சிகிச்சை பெற்ற பிறகு துபாய் சென்று சில நாட்கள் தங்கினார். அப்போது துபாயில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பினராயி விஜயன் கலந்து கொண்டார்.
அவ்வாறு துபாயில் அவர் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது, பினராயி விஜயன் வழக்கமாக அணியும் வேட்டி, சட்டைக்கு பதிலாக பேண்ட் மற்றும் ஷர்ட் அணிந்திருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் செய்திகளில் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் கேரள மாநில தலைமைச் செயலகத்தில் பொது நிர்வாகத்துறையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வரும் மணி குட்டன் என்பவர், முதல்-மந்திரியின் உடை குறித்து விமர்சித்து வாட்ஸ்-ஆப்பில் கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தலைமைச் செயலக அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த முதன்மை செயலாளர், மணி குட்டனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story