நீட் மசோதா: திருப்பி அனுப்ப கவர்னருக்கு அதிகாரம் உள்ளது - தமிழிசை சவுந்தரராஜன்


நீட்  மசோதா:  திருப்பி அனுப்ப கவர்னருக்கு அதிகாரம் உள்ளது - தமிழிசை சவுந்தரராஜன்
x
தினத்தந்தி 4 Feb 2022 3:41 PM IST (Updated: 4 Feb 2022 3:41 PM IST)
t-max-icont-min-icon

நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்ப கவர்னருக்கு அதிகாரம் உள்ளது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி கதிர்காமம் முத்துமாரியம்மன் கோயில் செடல் உற்சவத்தில் கலந்துகொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;-

பிற மாநிலங்களை ஒப்பிடும்போது புதுச்சேரியில் கொரோனா தொற்று குறைந்து உள்ளது என்பதைப் பார்க்கும் போது மக்கள் கட்டுப்பாட்டோடு இருக்கிறார்கள் எனத் தெரிகிறது. திருவிழாக்களுக்கு அனுமதி அளித்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். பள்ளிகள் திறக்கப்பட்டதன் காரணமாக மாணவர்களும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்ப கவர்னருக்கு அதிகாரம் உள்ளது. மக்களுக்கு நல்லது இல்லை என்றாலும் ஒரு மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பலாம். அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக தமிழக கவர்னர் நடந்து கொண்டார் என்பது சரியல்ல. ஆளுநர் அவரின் உரிமையைப் பயன்படுத்தி உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story