கர்நாடகத்தில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அனுமதி


கர்நாடகத்தில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அனுமதி
x
தினத்தந்தி 4 Feb 2022 9:42 PM IST (Updated: 4 Feb 2022 9:42 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அனுமதி அளிப்பதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அனுமதி அளிப்பதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

கர்நாடகத்தில் கொரோனா தடுப்பு விதிகள் அதாவது ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில்  நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் கர்நாடகத்தில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அனுமதி அளிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மந்திாி சுதாகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த ஜனவரி மாதம் கொரோனா பாதித்தவர்களில் சுமார் 5 சதவீதம் பேர் மட்டுமே ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர். அது தற்போது 2 சதவீதமாக குறைந்துள்ளது. இதை அரசு கவனித்து, ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு மேலும் தளர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி தியேட்டர்களில் 100 சதவீதம் பேர் இருக்கையில் அமர்ந்து படம் பார்க்கலாம்.

அதே போல் யோகா மையம், உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளத்திலும் 100 சதவீதம் பேர் தங்களின் பணிகளை மேற்கொள்ளலாம். ஆனால் அங்கு கொரோனா தடுப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். அதாவது முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், சானிடைசர் பயன்படுத்த வேண்டும். இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்துவார்கள். விதிமுறைகள் மீறப்பட்டால் அத்தகைய தியேட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.


Next Story