மராட்டியத்தில் கட்டிடம் இடிந்த வழக்கு; 4 பேர் கைது


மராட்டியத்தில் கட்டிடம் இடிந்த வழக்கு; 4 பேர் கைது
x
தினத்தந்தி 5 Feb 2022 12:25 AM IST (Updated: 5 Feb 2022 12:25 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில் என்ஜினீயர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


புனே,


மராட்டியத்தின் புனே நகரில் எரவாடா சாஸ்திரி நகர் பகுதியில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.  இதில், தொழிலாளர்கள் பலர் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கட்டுமான நிலையில் இருந்த கட்டிடம் திடீரென நேற்று இடிந்து விழுந்துள்ளது.  இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.  பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து புனே நகர தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றனர்.  தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்தன.  மீதமுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.

இதில், 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.  இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.  2 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.  3 பேர் லேசான காயங்களுடன் உள்ளனர்.

இந்த சம்பவத்தில் கண்காணிப்பாளர், பாதுகாப்பு என்ஜினீயர், மேலாளர் உள்பட 4 பேரை புனே நகர போலீசார் கைது செய்து உள்ளனர்.  கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அரசு அறிவித்து உள்ளது.


Next Story