இந்தியாவில் செலுத்திய கொரோனா தடுப்பூசி 169 கோடியை நெருங்கியது


இந்தியாவில் செலுத்திய கொரோனா தடுப்பூசி 169 கோடியை நெருங்கியது
x
தினத்தந்தி 5 Feb 2022 12:58 AM IST (Updated: 5 Feb 2022 12:58 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் செலுத்திய கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 169 கோடியை எட்டியுள்ளது.



புதுடெல்லி,



இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2021ம் ஆண்டு ஜனவரியில் இருந்து தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.  இவற்றில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு உள்நாட்டு உற்பத்தி தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அவசரகால அனுமதி வழங்கியிருந்தது.

இதனை தொடர்ந்து நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.  முதல் டோஸ், 2வது டோஸ் மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் செலுத்திய கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 169 கோடியை எட்டியுள்ளது.  நேற்றிரவு (வெள்ளி கிழமை) 7 மணி அளவில் 42 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.


Next Story