நாட்டில் 15-18 வயது நபர்கள் 65% பேருக்கு தடுப்பூசி முதல் டோஸ்
நாட்டில், 15-18 வயதுக்கு உட்பட்ட 65% பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2021ம் ஆண்டு ஜனவரியில் இருந்து தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. கடந்த ஆண்டு ஜனவரி 16ல், முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கின.
இதன்பின், முன்கள பணியாளர்களுக்கு பிப்ரவரி 2ந்தேதியும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1ந்தேதியும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மே 1ந்தேதியும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவக்கப்பட்டன.
இதனையடுத்து, இந்த ஆண்டு ஜனவரி 3ந்தேதி, 15 முதல் 18 வயதுக்குஉட்பட்ட இளம் பருவத்தினருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது. இந்நிலையில், 15 - 18 வயதுக்கு உட்பட்டோரில் 65 சதவீதம் பேருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இதேபோல், அந்த வயதுக்கு உட்பட்ட 34.90 லட்சம் பேருக்கு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டு உள்ளன என மத்திய சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story