முக்கோண காதல்; தற்கொலைக்கு முயன்ற 2வது காதலியை மீட்க முயன்ற காதலனுக்கு நேர்ந்த கதி...
கர்நாடகாவில் தற்கொலைக்கு முயன்ற 2வது காதலியை மீட்க சென்று காதலன் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடகாவை சேர்ந்தவர் லாய்டு டிசோசா. அபுதாபியில் பணியாற்றி வந்த அவர், கொரோனா பெருந்தொற்றால் நாடு திரும்பினார். ஓராண்டு இந்தியாவில் தங்க திட்டமிட்ட டிசோசா, தனக்கு முன்பே சமூக ஊடகம் வழியே தொடர்பில் இருந்த 2 பெண்களுடன் மீண்டும் நட்பை புதுப்பித்து உள்ளார்.
இதில் முதல் பெண்ணுடன் காதலில் இருந்தபடியே, 2வது பெண்ணிடமும் காதலில் ஈடுபட்டு உள்ளார். இந்த விசயம் ஒரு கட்டத்தில் 2 பெண்களுக்கும் தெரிய வந்துள்ளது. அவர்கள் டிசோசாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
அவர்களை அமைதிப்படுத்துவதற்காக சோமேஷ்வரா பீச்சுக்கு அழைத்து சென்றுள்ளார். அவர்களுடன் ஒன்றாக சமரச பேச்சில் ஈடுபட்டு உள்ளார். இதில் வாக்குவாதம் முற்றியதில், அந்த பெண்களில் ஒருவர் தண்ணீருக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அவரை காப்பாற்ற டிசோசாவும் தண்ணீருக்குள் குதித்துள்ளார். இதில், அந்த பெண்ணை அவர் கரை சேர்த்து விட்டார். எனினும், நீரோட்டம் அவரை உள்ளே இழுத்து சென்றுள்ளது. அதில் இருந்து அவரால் வெளிவர முடியவில்லை. அவரை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
டிசோசாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் அந்த பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
Related Tags :
Next Story