இந்தியாவில் படிப்படியாக குறைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு


இந்தியாவில் படிப்படியாக குறைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 5 Feb 2022 9:42 AM IST (Updated: 5 Feb 2022 9:42 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 952 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,27,952 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  நேற்று 1,49,394 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 1,27,952 ஆக குறைந்துள்ளது.  இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,19,52,712 லிருந்து 4,20,80, 664 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் கொரோனா பரவல் மற்றும் பாதிப்பு விகிதம் 7.98% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,059 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதுவரை 5,01,114 பேர் உயிரிழந்துள்ளனர்.  நேற்று 1,072 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் இன்று 1,059 ஆக குறைந்துள்ளது. 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,30,814 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 4,00,17,088 லிருந்து 4,02,47,902 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதித்து 13,31,648 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,53,081 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  இதுவரையில் 168.98 கோடி டோஸ் தடூப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. 

மத்திய சுகாதார அமைச்சகம் இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

Next Story