38 கோடி மதிப்பு உள்ள 2 வீடுகளை மனைவி ஷில்பா ஷெட்டிக்கு வழங்கிய ராஜ் குந்த்ரா
38 கோடி மதிப்பு உள்ள 2 வீடுகளை மனைவி ஷில்பா ஷெட்டியின் பெயருக்கு கணவன் ராஜ் குந்த்ரா மாற்றி உள்ளார்
மும்பை
பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாச படம் எடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கும் தொடர்பு உள்ளதா என்பதை கண்டறிய போலீசார் மும்பையில் உள்ள நடிகையின் வீட்டில் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் கணவர் சிறையில் இருப்பதால் நடிகை ஷில்பா ஷெட்டி மனம் உடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். தற்போது ஜாமீனில் வெளிவந்த அவர், மும்பை ஜூஹூ பகுதியில் இருந்த தனக்கு செந்தமான இரண்டு வீடுகளையும் தனது மனைவி ஷில்பா ஷெட்டியின் பெயருக்கு மாற்றி உள்ளார். இந்த வீடுகளின் மதிப்பு சுமார் 38 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story