இந்தியாவின் ’இசைக்குயில்’ லதா மங்கேஷ்கர் காலமானார்


இந்தியாவின் ’இசைக்குயில்’ லதா மங்கேஷ்கர் காலமானார்
x
தினத்தந்தி 6 Feb 2022 9:57 AM IST (Updated: 6 Feb 2022 10:01 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்

மும்பை,

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர். 92 வயதான இவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடந்த மாதம் 8-ந்தேதி தென்மும்பையில் உள்ள பிரீச் கேன்டி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொற்று பாதிப்பு லேசாக இருந்த போதும், வயது மூப்பின் காரணமாக அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து கடந்த 29-ந்தேதி வென்டிலேட்டரில் இருந்து மாற்றப்பட்டார். எனினும் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்தார். லதா மங்கேஷ்கர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக அவரது குடும்பத்தினரும் கூறியிருந்தனர்.

இந்தநிலையில் நேற்று மீண்டும் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவர் மீண்டும் வென்டிலேட்டர் உதவியுடன் உயிர்காக்கும் சிகிச்சையில் வைக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும், இன்று காலை சிகிச்சை பலனின்றி லதா மங்கேஷ்கர் காலமானார்.  பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர்  உயிரிழந்தது  ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

30 ஆயிரம் பாடல்கள்

லதா மங்கேஷ்கர் நாட்டின் உயரிய பாரத் ரத்னா விருதை கடந்த 2001-ம் ஆண்டு பெற்றார். மேலும் தாதா சாகிப் பால்கே, பத்ம பூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட பல விருதுகளை வாங்கி உள்ளார். இவர் தனது 13 வயதில் இருந்து பாடி வருகிறார். இதுவரை அவர் இந்தி, தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.

Next Story