லதா மங்கேஷ்கர் உடல் மும்பையில் உள்ள இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது: பிரபலங்கள் நேரில் அஞ்சலி


லதா மங்கேஷ்கர் உடல் மும்பையில் உள்ள இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது: பிரபலங்கள் நேரில் அஞ்சலி
x
தினத்தந்தி 6 Feb 2022 2:02 PM IST (Updated: 6 Feb 2022 2:02 PM IST)
t-max-icont-min-icon

லதா மங்கேஷ்கர் உடல் மும்பையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மும்பை,

இந்தி திரைப்பட உலகின் மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் (வயது 92) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

கடந்த சில தினங்களாக லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக் கிடமாகவே இருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், நேற்று அவரது உடல்நிலை சற்று சீரடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இன்று காலையில் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. அவரது உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.  எனினும், சிகிச்சை பலனின்றி  லதா மங்கேஷ்கர் உயிர் பிரிந்தது. 

லதா மங்கேஷ்கர் உடல் மும்பையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. லதா மங்கேஷ்கர் உடலுக்கு திரயுலக பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும்  அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 


பாடகி லதா மங்கேஷ்கரின் உடலுக்கு இறுதி சடங்கு  மராட்டிய  மாநில அரசின் மரியாதையோடு நடத்தப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனால், இதற்கான முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்றுகிறது. இறுதிச்சடங்கு நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக பிரபல ஆங்கில தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. 


Next Story