ஹிஜாப் தடையால் பெண்கள் கல்வி பாதிக்கப்படும்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி
முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் கல்விக்குக் கேடு விளைவிக்கும் வகையில் கடந்த சில நாட்களாக அரசியல் நடக்கிறது என குமாரசாமி விமர்சித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வரை தடை விதிக்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக கர்நாடக முன்னாள் முதல் மந்திரி குமாராசாமி , முதல் மந்திரி பசவாரஜ் பொம்மையை கடுமையாக சாடியுள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த எச்.டி.குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், "முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் கல்விக்குக் கேடு விளைவிக்கும் வகையில் கடந்த சில நாட்களாக அரசியல் நடக்கிறது. ஒருபுறம் பாஜக பெண் பிள்ளைகள் கற்கட்டும், பாதுகாப்பாக இருக்கட்டும் எனக் கூறுகிறது.
இன்னொரு பக்கம் அதற்கு எதிர்மாறாக நடந்து கொள்கிறது. முதல்வராக இருக்கும் பசவராஜ் பொம்மைக்கு அவரது மந்திரிகள் மீதே கட்டுப்பாடு இல்லை. பள்ளிகளில் ஹிஜாப் அணிவிதில் புதிய விதிமுறைகளைப் புகுத்த வேண்டாம். இத்தகைய கெடுபிடிகளால் பெண் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படும்” எனத்தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story