லதா மங்கேஷ்கர் மறைவு: மராட்டியம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நாளை விடுமுறை அறிவிப்பு


லதா மங்கேஷ்கர் மறைவு: மராட்டியம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நாளை விடுமுறை அறிவிப்பு
x
தினத்தந்தி 6 Feb 2022 4:20 PM IST (Updated: 6 Feb 2022 4:22 PM IST)
t-max-icont-min-icon

லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாளை பொது விடுமுறை அளிக்கப்படுவதாக மராட்டிய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 92. 

சுமார் 20 நாட்களுக்கும் மேலாக கொரோனா தொற்றுக்காக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று காலை அடுத்தடுத்த பல உறுப்புகளும் செயலிழக்க 8.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

லதா மங்கேஷ்கரின்  உடல் இன்று மாலை 6.30 மணி அளவில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசியக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டு இரண்டு நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள லதா மங்கேஷ்கரின்  இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  மறைந்த லதா மங்கேஷ்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த  பிரதமர் மோடி மும்பை வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்தநிலையில்,  பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மகாராஷ்டிரா அரசு நாளை (பிப்ரவரி 7) ஒரு பொது விடுமுறை அறிவித்துள்ளது. பாடகி லதா மங்கேஷ்கர் மறைவையொட்டி மேற்கு வங்க அரசும் நாளை விடுமுறை அறிவித்துள்ளது.

Next Story