அசாமில் 100க்கும் மேற்பட்ட கொக்குகள் உயிரிழப்பு; பறவை காய்ச்சலா...?


அசாமில் 100க்கும் மேற்பட்ட கொக்குகள் உயிரிழப்பு; பறவை காய்ச்சலா...?
x
தினத்தந்தி 7 Feb 2022 2:57 AM IST (Updated: 7 Feb 2022 2:57 AM IST)
t-max-icont-min-icon

அசாமில் 100க்கும் மேற்பட்ட கொக்குகள் ஒரே நேரத்தில் உயிரிழந்த சூழலில் பறவை காய்ச்சலாக இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.


பர்ஹாம்பூர்,


அசாமின் பர்ஹாம்பூரில் நகாவன் நகரில் சாந்திவன பகுதியில் நூற்றுக்கணக்கான பறவைகள் உயிரிழந்து கிடந்தன.  கனமழை மற்றும் கடும்பனி ஆகியவற்றை தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளது.

கடுமையான குளிரால் பறவைகள் உயிரிழந்து இருக்க கூடும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.  இதனை கண்ட உள்ளூர்வாசிகள் மீதமிருந்த பறவைகளை காப்பாற்றுவதற்காக நெருப்பு மூட்டி வெப்பம் பரவ செய்தனர்.  பல பறவைகள் இறந்தபோதிலும், நெருப்பு மூட்டி அனல் பரவ செய்து, மற்ற பறவைகளை காப்பாற்றினோம் என அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

இதுபற்றி வனசரக அதிகாரி மலாகர் கூறும்போது, அனைத்து பறவைகளும் மீட்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படும்.  அவற்றை குணப்படுத்த எங்களால் முயன்றவரை சிறப்புடன் செயல்படுவோம்.  வானிலை மோசமடைந்த சூழலால் மருத்துவர்கள் வரவில்லை.  100க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்து உள்ளன என தெரிவித்து உள்ளார்.  பறவை காய்ச்சலால் அவை பாதிப்படைந்து உயிரிழந்து இருக்க கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.


Next Story