லதா மங்கேஷ்கர் மறைவு; 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்: உ.பி. அரசு அறிவிப்பு


லதா மங்கேஷ்கர் மறைவு; 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்:  உ.பி. அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 7 Feb 2022 5:40 AM IST (Updated: 7 Feb 2022 6:04 AM IST)
t-max-icont-min-icon

பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவை தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு அறிவித்து உள்ளது.



லக்னோ,


பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் காலமானார்.  இந்தியாவின் இன்னிசைக்குயில் என்று போற்றப்பட்ட அவருக்கு வயது 92.  அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த மாதம் 8-ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவக்கும் விதமாக 2 நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், 2 நாட்களுக்கு தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய தகவல் ஒலிபரப்பு  மந்திரி அனுராக் சிங் தாக்குர், உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மற்றும் பல்வேறு துறை சார்ந்தவர்களும் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவை தொடர்ந்து 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என உத்தர பிரதேச அரசு அறிவித்து உள்ளது.

இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பில், பிப்ரவரி 6ந்தேதியில் இருந்து பிப்ரவரி 7ந்தேதி வரை துக்கம் கடைப்பிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.




Next Story