அரசின் ரூ.3 லட்சம் கோடி திட்டத்தினால் 3.5 லட்சம் நிறுவனங்கள் பயன்; பிரதமர் மோடி


அரசின் ரூ.3 லட்சம் கோடி திட்டத்தினால் 3.5 லட்சம் நிறுவனங்கள் பயன்; பிரதமர் மோடி
x
தினத்தந்தி 8 Feb 2022 2:37 AM IST (Updated: 8 Feb 2022 2:37 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் ரூ.3 லட்சம் கோடி நிதி திட்டத்தினால் 3.5 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயன் பெற்றுள்ளன என பிரதமர் மோடி கூறியுள்ளார்.




புதுடெல்லி,



பிரதமர் மோடி நாடாளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார்.  அதில், அவர் கூறும்போது, நம்முடைய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அரசின் ரூ.3 லட்சம் கோடி திட்டத்தினால் 3.5 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயன் பெற்றுள்ளன என கூறியுள்ளார்.  இதனால், 1.5 கோடி வேலைகள் பாதுகாக்கப்பட்டு உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச அளவில் விரைவான வளர்ச்சியை, இந்திய பொருளாதாரம் கொண்டுள்ளது.  பெருந்தொற்றுக்கு இடையே நமது பொருளாதார நிலையை உலக நாடுகள் கவனத்தில் கொண்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story