“தகவல் இல்லை எனக் கூறும் அரசாக உள்ளது” - தயாநிதி மாறன் எம்.பி. விமர்சனம்
எதைக் கேட்டாலும் தகவல் இல்லை எனக் கூறும் அரசாக மத்திய அரசு உள்ளது என மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேசிய போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவைக்கு வராததை சுட்டிக்காட்டினார். வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்கப்படும் என நம்பிய நடுத்தர மக்களுக்கு நிதியமைச்சர் நன்றி தெரிவித்து ஏமாற்றியதாகவும், குறைந்த பட்ச ஆதார விலையை அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும், எதைக் கேட்டாலும் அது குறித்த தகவல் தங்களிடம் இல்லை எனக் கூறும் 'No data available' அரசாக மத்திய அரசு உள்ளது என்றும் அவர் விமர்சித்தார். ‘வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’ என்று அறிஞர் அண்ணா கூறியதாக சுட்டிக்காட்டிய அவர், எதிர்பாராத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு, நிதி ஒதுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.
Related Tags :
Next Story