காங்கிரஸ் கட்சி லதா மங்கேஷ்கரின் குடும்பத்துக்கு அநீதி இழைத்தது - மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு!
லதா மங்கேஷ்கரின் இளைய சகோதரருக்கு காங்கிரஸ் அநீதி இழைத்தது என்று காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசினார்.
புதுடெல்லி,
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறும் போது, லதா மங்கேஷ்கரின் இளைய சகோதரர் ஹிருதயநாத் மங்கேஷ்கருக்கு காங்கிரஸ் அநீதி இழைத்தது என்று காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசினார்.
இது குறித்து அவர் பேசும்போது, “பண்டிட் ஹிருதயநாத் மங்கேஷ்கர் ஜி அகில இந்திய வானொலியில் பணியாற்றிய போது அவரை பணியில் இருந்து காங்கிரஸ் நீக்கியது.
அவர் ஒருமுறை இந்துத்துவ தலைவர் சாவர்க்கரை சந்தித்து பேட்டி காணும் போது, அவருடைய பாடல் ஒன்றை வானொலியில் பாட உள்ளதாக கூறினார்.
அதற்கு சாவர்க்கர், என்னுடைய பாடலை பாடினால் உங்களை சிறையில் அடைப்பார்கள் என்று கூறினார்.
ஆனால், அதனை மீறி அவர் அந்த பாடலை பாடினார். அதனை தொடர்ந்து 8வது நாள் அவரது வேலை பறிபோனது.
காங்கிரஸ் அரசு, இந்துத்துவ தலைவர் சாவர்க்கரின் தேசப்பற்று பாடலை ஹிருதயநாத் மங்கேஷ்கர் பாடியதற்காக அவரை வேலையை விட்டு துரத்தியது. இதுதான் காங்கிரஸ் கட்சியின் கருத்து சுதந்திரம்.”
இவ்வாறு காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசினார்.
Related Tags :
Next Story