அருணாசல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு


அருணாசல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
x
தினத்தந்தி 8 Feb 2022 5:06 PM IST (Updated: 8 Feb 2022 5:06 PM IST)
t-max-icont-min-icon

அருணாசல பிரதேசம் காமெங் செக்டார் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்றது.

இடாநகர், 

அருணாசல பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக சீரற்ற வானிலை நிலவி வருகிறது. கடுமையான பனிப்பொழிவும் நிலவி வருகிறது. அங்குள்ள காமெங் செக்டார் பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடும் பனிச்சரிவு ஏற்பட்டதில் லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ் வர்தன் பாண்டே உள்ளிட்ட 7 ராணுவ வீரர்கள் அதில் சிக்கிக் கொண்டனர். 

இதையடுத்து அங்கு மீட்புப் பணிகள் முழு வீச்சில்  நடைபெற்றன.  இந்த நிலையில், பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ  வீரர்கள் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.


Next Story