ஹிஜாப் விவகாரத்தில் மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு


ஹிஜாப் விவகாரத்தில் மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 8 Feb 2022 6:08 PM IST (Updated: 8 Feb 2022 6:08 PM IST)
t-max-icont-min-icon

ஹிஜாப் விவகாரத்தில் மக்களவையில் இருந்து திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

புதுடெல்லி,

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.ஹிஜாப் போராட்டத்துக்கு எதிராக, சில மாணவர்கள் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஹிஜாப் அணியும் மாணவிகளை வகுப்புக்குள் அனுமதித்தால் காவித் துண்டு அணிந்த எங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கல்லூரிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த விவகாரம் இன்று நாடாளுமன்ற மக்களவியிலும் எதிரொலித்தது. 

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம்  அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் மக்களவையில் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இவ்விவகாரத்தை மத்திய அரசு ஏற்க மறுப்பதாக கூறி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 


Next Story