இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சற்று அதிகரித்தது!!


இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  சற்று அதிகரித்தது!!
x
தினத்தந்தி 9 Feb 2022 9:48 AM IST (Updated: 9 Feb 2022 9:48 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை விட இன்று அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா 3-வது அலை வேகமாக குறைந்து வருகிறது. நேற்றைய தினம் இந்த எண்ணிக்கை மேலும் குறைந்து, 67 ஆயிரத்து 597  ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 71,365 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நேற்று 1,188 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 1,217 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் இதுவரை  கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,05,279 ஆக உயர்ந்துள்ளது. 

அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 1,72,211 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.இந்தியாவில் தற்போது 8,92,828 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நாடு முழுவதும் இதுவரை 1,70,87,06,705  டோஸ்  கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாத்துறை தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 53,61,099 டோஸ் போடப்பட்டுள்ளது.நாட்டில் கொரோனா பரவல் விகிதம் 4.54 சதவீதமாக உள்ளது.

Next Story