இந்திய ராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்தார் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் !


இந்திய ராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்தார் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் !
x
தினத்தந்தி 9 Feb 2022 11:41 AM IST (Updated: 9 Feb 2022 11:41 AM IST)
t-max-icont-min-icon

மலை இடுக்கில் சிக்கி தவித்த இளைஞரை பத்திரமாக மீட்ட இந்திய ராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்தார்.

திருவனந்தபுரம், 

பாலக்காட்டை சேர்ந்தவர் பாபு (வயது28). இவரும் வேறு 3 நண்பர்களும் நேற்று முன்தினம் கேரளாவில் உள்ள மலம்புழையில் காட்டுப்பகுதிக்குள் மலையேற சென்றனர். மதியம் பாபு மலையில் இருந்து இறங்கியபோது, பள்ளமான இடத்தில் பாறை இடுக்குகளுக்குள் தவறி விழுந்தார். அவருடன் சென்றவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை.

இதை தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தொடங்கியது. நீண்ட நேரத்திற்கு பின் வாலிபர் பாபு சிக்கியுள்ள இடம் கண்டு பிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்திய ராணுவத்தின் உதவியை கேரள அரசு நாடியது.

உதகை வெலிங்டன், பெங்களூரில் இருந்து வந்த மலையேற்ற பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள்  மலை இடுக்கில் 48 மணி நேரமாக சிக்கி உள்ள பாபுவை நெருங்கி, அவருக்கு உணவு, தண்னீர் வழங்கினர். பின்னர், இளைஞர் பாபுவை இந்திய ராணுவ வீரர்கள் கயிறு மூலம் மீட்டனர்.

இந்நிலையில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.மலை இடுக்கில் சிக்கி தவித்த  இளைஞரை பத்திரமாக மீட்ட இந்திய ராணுவத்தினருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மலம்புழாவில் சேராடு மலையில் சிக்கிய இளைஞர் மீட்கப்பட்டதையடுத்து கவலைகள் ஓய்ந்தன.

அவரது உடல்நிலையை மீட்டெடுக்க தேவையான சிகிச்சை மற்றும் பராமரிப்பு இப்போது வழங்கப்படும்.

மீட்புப் பணியை முன்னெடுத்த ராணுவ வீரர்களுக்கும், உரிய நேரத்தில் உதவிய அனைவருக்கும் நன்றி” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Next Story