கொரோனா பாதிப்பு: கேரளாவில் ஒரே நாளில் 29 பேர் பலி


கொரோனா பாதிப்பு: கேரளாவில் ஒரே நாளில் 29 பேர் பலி
x
தினத்தந்தி 9 Feb 2022 7:14 PM IST (Updated: 9 Feb 2022 9:46 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் கொரோனாவுக்கு 2.58 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில்  23,253- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால்  ஒரே நாளில்  29 பேர் உயிரிழந்துள்ளனர்.  தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 2.58 லட்சமாக உள்ளது.   

தொற்று பாதிப்பு விகிதம்  27.4 சதவிகிதமாக உள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய 84,919- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. மாவட்ட அளவில் அதிகபட்சமாக எர்ணாகுளம் மாவட்டத்தில் 4,441- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் 2,673 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கோட்டயம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 2,531- பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Next Story