இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று குறைவு!


இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று குறைவு!
x
தினத்தந்தி 10 Feb 2022 9:27 AM IST (Updated: 10 Feb 2022 9:37 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,084 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இது நேற்றைய பாதிப்பை விட 6 சதவீதம் குறைவு. நேற்றைய பாதிப்பு 71,365 ஆக இருந்த நிலையில் இன்று அந்த எண்ணிக்கை குறைந்தது.
  
இதனால் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,24,78,060 ஆக உயர்ந்தது. நாட்டில் கொரோனா தொற்று பரவல் விகிதம் 4.44 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,241 உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 5,06,520 ஆக உயர்ந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,67,882 குணமடைந்தனர். இதனால் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,11,80,751 ஆக உயர்ந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,02,039 பேர் சிகிச்சையில் உள்ளனர். நாட்டில் தற்போது சிகிச்சை பெற்று வருவோர் மொத்த எண்ணிக்கை 7,90,789 ஆக உள்ளது.

நாட்டில் அதிக கொரோனா பாதிப்பு கேரளாவில் பதிவானது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 23,253 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியானது.

Next Story