சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண்களை ஏமாற்ற எதிர்க்கட்சிகள் முயற்சி - பிரதமர் மோடி


சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண்களை ஏமாற்ற எதிர்க்கட்சிகள் முயற்சி - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 10 Feb 2022 2:25 PM IST (Updated: 10 Feb 2022 2:25 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தை கலவரம் இல்லாமல் வைத்திருக்கவும், குற்றவாளிகளை சிறைக்கு அனுப்பவும், பெண்கள் அச்சமின்றி வாழவும் சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. மேற்கு உ.பி.யில் உள்ள சில தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடக்கிறது. 11 மாவட்டங்களில் அடங்கிய 58 தொகுதிகள், முதல்கட்ட தேர்தலை சந்திக்கின்றன. 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 9 பேர் மந்திரிகள் ஆவர்.

இன்று சஹாரன்பூரில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் உரையாற்றிய பிரதமர் மோடி,

 “இதுபோன்ற குளிர் நிலவும்  காலையில், மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கப் போகிறார்கள் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வாக்காளர்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன். பாஜகவின் 'கோஷ்னா பத்ரா' உத்தரபிரதேச நலனுக்கான தீர்மானம்” என்றார்.

பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் பலன்களை சிறு விவசாயிகள் தொடர்ந்து பெறுவதை உறுதி செய்ய உத்தரபிரதேசத்தில் பாஜக தலைமையிலான அரசு அமைவது மிகவும் முக்கியம் என்றார்.

மேலும் பேசிய பிரதமர், 

கரும்பு விவசாயிகளுக்கு நிரந்தர தீர்வு காண அரசு செயல்பட்டு வருகிறது,"சர்க்கரை சந்தையின் ஏற்ற தாழ்வுகளை சமாளிக்க, கரும்பு எத்தனால் தயாரிக்கவும் பயன்படுத்தப்படும். கரும்பு விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் கரும்பு அடிப்படையிலான எத்தனால் மூலம் ரூ.12,000 ஆயிரம் கோடி பெறப்பட்டது, ”என்று கூறினார்.

மேலும்  சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண்களை ஏமாற்ற எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாகக் கூறிய மோடி, “முஸ்லீம் சகோதரிகள் எங்கள் தெளிவான நோக்கங்களை புரிந்துகொள்கிறார்கள். முத்தலாக் தடை அவர்களுக்கு நீதியை உறுதி செய்தது. முஸ்லீம் பெண்களின் ஆதரவை பாஜக பெற்றபோது, முஸ்லீம் சகோதரிகளின் மகள்கள் 'மோடி-மோடி' என்று சொல்கிறாரே என்று இந்த 'தேகேதார்' வாக்குகள் கலக்கமடைந்தன.

ஒரு குடும்ப கட்சி, உபி.,மக்களுக்கு பொய் வாக்குறுதி அளித்து வருகிறது. ஒருவர் பெரிய அளவில் வாக்குறுதி அளித்தால், அதில் ஒன்றும் இருக்காது. பொறுப்பற்ற முறையில் அளிப்பார்கள். மின்சாரம் அளிப்பதாக வாக்குறுதி அளிக்கின்றனர். ஆனால், மாநிலத்தை இருளில் வைத்து விட்டு, தாங்கள் வசிக்கும் மாவட்டங்களை மிளிர செய்துவிட்டு, ஷகாரான்பூர் உள்ளிட்ட மற்ற மாவட்டங்களை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர்.

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு முஸ்லிம் பெண்களுக்கும் ஆதரவாக மத்திய அரசு உள்ளது. அந்த பெண்களின் வாழ்க்கை பின்னடைவை சந்திக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சியினர் தூண்டி விடுகின்றனர். 

இவ்வாறு  அவர்  பேசினார்.

Next Story