குஜராத்தில் இன்று 2,275 பேருக்கு கொரோனா; 8,172 பேர் டிஸ்சார்ஜ்


குஜராத்தில் இன்று 2,275 பேருக்கு கொரோனா; 8,172 பேர் டிஸ்சார்ஜ்
x
தினத்தந்தி 10 Feb 2022 8:35 PM IST (Updated: 10 Feb 2022 8:35 PM IST)
t-max-icont-min-icon

குஜராத்தில் தற்போது 21,437 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காந்திநகர்,

குஜராத் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,275 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதனால் குஜராத் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,761 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 8,172 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

இதன் மூலம் குஜராத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,78,289 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 21,437 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக குஜராத் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story